Sunday 20 May 2012

அழாத கண்கள்



 

உன் தாகம் தீரும்வரை 
உவர்ப்பில்லாத 
தண்ணீரைக் கொடுக்கும் 
என் கண்கள் உனக்காக...
 
இந்த உலகம் 
தண்ணீரில்லாமல் 
அழியும் தருணத்தில்..!





Sunday 29 April 2012

மீண்டுமொரு நக்கீரன்






வா வந்து 
ஒட்டிக் கொள் என்னுடன்..


மலரின் வாசமா..
மங்கையின் வாசமா..


பிறக்கட்டும் நமக்காக 
மீண்டுமொரு 
நக்கீரன்..!


Monday 23 April 2012

தொலைந்தேன் எங்கோ




தேடிக்  கொண்டிருக்கிறேன்
தொலைந்து போன 
என் முகவரியை..

தொலையாத 
உன் நினைவுகளுடன்..!


மாய்கிறது மை




என் 
உயிரினைப் படி 
என்று 
தினம் தினம் 
எழுதி எழுதி 
மாய்ந்து போகிறது 
என் பேனா மை ..!


Saturday 21 April 2012

காத்திருக்கிறேன் கலங்காமல்


சருகாய்
நீ
உதிர்ந்தாலும்..

கலங்காமல்
கரைத்துக் கொள்கிறேன்
வந்துவிடு என்னைத்தேடி..!







நன்றி :சாரதி (புகைப்படம்)


Wednesday 18 April 2012

உன் பாதத்தில் என் காலடி






உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன்  பாதச்  சுவடுகளில்
உனக்கே தெரியாமல்..  

திரும்பிப் பார்த்துவிடு 
ஒருமுறையாவது..!




Tuesday 17 April 2012

இங்கே எழுது





காத்திருக்கிறது

என் கழுத்து..

உன் இதழ்கள் 


எழுதும் கவிதைக்காக..!